சிவகாசியில் கேபிள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டியதில் குடிநீர் குழாய் உடைப்பு

Added : மார் 19, 2023 | |
Advertisement
சிவகாசி, : சிவகாசி புது ரோட்டில் கேபிள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டியதில் குடிநீர் குழாய் உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேறி வீணாக ரோட்டில் ஓடுவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இந்த குழாய் தேரடி முக்கிலிருந்து புது ரோடு வழியாக
 சிவகாசியில் கேபிள் பதிப்பதற்காக பள்ளம்  தோண்டியதில் குடிநீர் குழாய் உடைப்பு



சிவகாசி, : சிவகாசி புது ரோட்டில் கேபிள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டியதில் குடிநீர் குழாய் உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேறி வீணாக ரோட்டில் ஓடுவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இந்த குழாய் தேரடி முக்கிலிருந்து புது ரோடு வழியாக செல்கிறது.

இந்நிலையில் புது ரோட்டில் குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் கேபிள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது.

இதில் குடிநீர் குழாய் சேதமடைந்து விட்டது. இதனால் குடிநீர் வெளியேறி ரோட்டில் வீணாக ஓடுகிறது. சிவகாசியில் பொதுவாகவே பத்து நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.

இந்நிலையில் கேபிள் பதிக்க குழாய் உடைக்கப்பட்டு குடிநீர் வீணாவதால் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சேதமடைந்த குழாயை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும், என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X