தேனி, : தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க தேனி மாவட்டத் தலைவர் மனோகரன். இவர் மற்றும் நிர்வாகிகள் போடி, கம்பம், ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கிய கோரிக்கை மனுவில், 'மருத்துவர் சமூகம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளது.
இதனால் அரசின் சலுகைகள் கிடைப்பது இல்லை. மருத்துவர் சமூகத்தைமிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கி, தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினர் வகுப்பில் சேர்க்க வேண்டும்.
கோயில்களில் முடி எடுக்கும் தொழிலாளர்கள், நாதஸ்வரம், தவிலிசை கலைஞர்களை அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஏற்று சட்டமாக்க' பரிந்துரைக்க கோரினர்.