தேனி, : குப்பிநாயக்கன்பட்டி பூங்கோதை நகர் இளையராஜா 47, ஆண்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.
நேற்று முன்தினம் ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரும் போது எதிரே அமச்சியாபுரம் பிரிவில் அரப்படித்தேவன்பட்டி போஸ் 24, ஓட்டிவந்த டூவீலர் மோதியதில் காயமடைந்தார்.
சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
கூடலுார் பெருமாள் கோவில் தெரு லோகேஷ் 19 ஆண்டிபட்டி கூட்டுறவு கல்லுாரியில் டிப்ளமோ படிக்கிறார். தேனி கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
மதுரை தேனி ரோட்டில் திட்டசாலை அருகில் டூவீலரில் வரும் போது சோலைமலை அய்யனார் கோயில் தெரு பிச்சைமணி 40, சிக்னல் காட்டாமால் வலது புறம் திரும்பியுள்ளார்.
இதில் இருவரது டூவீலர்கள் மோதின. காயமடைந்து லோகேஷ் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement