சிவகங்கை, : சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு புரட்சித்தம்பி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானத்தை வாசித்தார்.
மாநில பொதுக்குழு ஜோசப் ரோஸ், குமரேசன், கல்வி மாவட்ட செயலாளர்கள் சகாய தைனேஸ், சிங்கராயர், ஜெயக்குமார், கல்வி மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், ஜோசப், ரமேஷ்குமார், மாவட்ட துணை தலைவர்கள் ரவி, ஸ்டீபன், மாவட்ட துணை செயலாளர்கள் ஜான் அந்தோணி, அமலசேவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தீர்மானம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீடு போன்றே, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு கல்லுாரி மாணவிகளுக்கான மாத ஊக்கத்தொகையை, உதவி பெறும் கல்லுாரி மாணவிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி திருச்சியில் மார்ச் 22ல் மாநாடு நடக்கிறது.
பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதலை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர், மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் இணைய தள செயலியை நீக்க வேண்டும் என தீர்மானித்தனர்.