சிவகங்கை, : சிவகங்கை அருகே சுந்தரநடப்பு மான்போர்ட் சி.பி.எஸ்.இ., பள்ளியில் இளந்தளிர் பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளி முதல்வர் இக்னேஷியஸ் தாஸ் தலைமை வகித்தார். சிவகங்கை இன்ஸ்பெக்டர் ஜெயராணி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, பதக்கம் வழங்கினார்.
உதவி முதல்வர் ராயல்அகஸ்டின், எஸ்.ஐ., கங்கா தேவி, சிறப்பு எஸ்.ஐ., மஞ்சுளா பங்கேற்றனர். இளந்தளிர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
குழந்தைக்கு ஆதரவு பெற்றோர்: சிவகங்கை புனித அலங்கார அன்னை ஆலய பாதிரியார் சேசுராஜா பேசியதாவது:
குழந்தைகளுக்காக தான் பெற்றோர் உழைக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.பெற்றோர் என்றும் குழந்தைகளுக்கு ஆதரவாகவே இருப்பார்கள் என்பதையும் அவர்கள்அறிய வேண்டும். குழந்தைகளை விட பணமோ, வேலையோ பெற்றோருக்கு முக்கியம்இல்லை என சொல்லும்விதத்தில் நடந்து கொள்ளுங்கள். அப்போது தான் நல்ல சமுதாயம் உருவாகும், என்றார்.