திருப்புத்துார், : திருமயம் லேனா விலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் சைபர் கிரைம் போலீசாரும், கணினி அறிவியல் துறையினரும் இணைந்து சைபர் பாதுகாப்பு மாநாடு நடந்தது.
புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி., வந்திதா பாண்டே ஆன்லைன் மோசடிகள், அலைபேசி குற்றத்தடுப்பு குறித்து விளக்கம் அளித்தனர். சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி., ரமேஷ்கிருஷ்ணன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
விரிவுரையாளர் இளமாறன், பயிற்சியாளர் அர்ஜூன்குமார் ஆகியோர் விழிப்புணர்வு அளித்தனர். பேராசிரியை இளவரசி தொகுத்து வழங்கினார். இன்ஸ்பெக்டர் கவிதா நன்றி கூறினார்.