இளையான்குடி, : இளையான்குடி அருகே இண்டங்குளம் அர்ச்சுணன்.இவர் காரைக்குடி அருகே பள்ளத்துாரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை விற்பனையாளராக இருந்தார்.
தன் தந்தை மது அருந்த இந்த கடை தான் காரணம்எனக்கூறி, வாலிபர் ஒருவர் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலால் எரிந்தார். இதில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த அர்ச்சுணனை மதுரை அரசு மருத்துவமனை தீக்காய பிரிவில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10லட்சம், கருணை அடிப்படை வேலை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். நேற்று இண்டக்குளம் அர்ச்சுணன் வீட்டிற்கு சென்ற அமைச்சர் பெரியகருப்பன், அவரது மனைவியிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.