தாயமங்கலம், : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கம் துவக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலில் பங்குனியில் 10 நாட்கள் திருவிழா நடக்கும்.
மதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, மானாமதுரை,இளையான்குடி, காரைக்குடி, திண்டுக்கல் பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தந்து முடிகாணிக்கை, அக்னிசட்டி, கரும்பு தொட்டில் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்கள் செலுத்துவர்.
மார்ச் 29 ல் இங்கு இரவு 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் பங்குனி விழா தொடங்குகிறது. ஏப்., 5 ல் பொங்கல், ஏப்., 6 ல் மின் தேர்பவனி நடைபெறும். பங்குனி பிறந்து 4 நாட்களே உள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கிவிட்டன.
இதன் காரணமாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டையில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க தொடங்கிவிட்டனர்.