வழிப்பறி இருவர் கைது
மானாமதுரை: மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் முகேஷ் கண்ணன் 19, சாஸ்தா நகர் அஜித்குமார் 23. இவர்கள் இருவரும்மார்ச் 17 அன்று வழிவிடும் முருகன் கோயில் பின்னால் நின்று, அந்த வழியாக நடந்து வந்த கீழப்பசலை ஆதிமூலம் 46, என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.200 வழிப்பறி செய்தனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மணல் திருட்டு: இருவர் கைது
மானாமதுரை: - மானாமதுரை அருகே கீழப்பசலை வைகை ஆற்று பகுதியில் சாக்கு மூடைகளில் மணல் அள்ளிய மூங்கில் ஊரணி மாணிக்கம் 30, கோபி 27,யை போலீசார் கைது செய்தனர்.
கத்தியால் குத்தி காயம்
குன்றக்குடி: குன்றக்குடி அருகே பூவாண்டிபட்டி ஆறுமுகம் 55. இவரது கடைக்கு எதிரே நின்ற டூவீலரை மர்ம நபர்கள் இருவர் திருட முயற்சித்தனர். அதை தடுக்க சென்ற ஆறுமுகத்தை கத்தியால் குத்திவிட்டு தப்பினர். காயமுற்ற ஆறுமுகத்தை காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்ஸ்பெக்டர் தேவகி விசாரிக்கிறார்.
ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
இளையான்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சந்தைபேட்டைதெரு முத்துநாகு மகன் கண்ணன் (எ) மாயக்கண்ணன் 46. இவர் இளையான்குடி அருகே கீழாயூரில் கண்மாய்கரையில் ரேஷன் அரிசியை பதுக்கி ராமநாதபுரத்திற்கு கடத்த முயற்சித்தார். இது குறித்து அறிந்த குடிமை பொருள் குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.ஐ., சோமசுந்தரம் தலைமையில் போலீசார் அவர் பதுக்கி வைத்திருந்த 20 (800 கிலோ) மூடை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்தனர்.
அலைபேசிக்காகசிறுமி தற்கொலை
சிவகங்கை: சிவகங்கை அருகே கன்னிமார்பட்டியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அங்குள்ள பள்ளியில் எட்டாம்வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு தேர்வுக்கு படிக்காமல், அலைபேசியில் விளையாடிக்கொண்டு இருந்தார். இதற்கு அவரது தந்தை திட்டினார். இந்த மனவேதனையில் வீட்டில் இருந்த டீசலை உடலில் ஊற்றி தீ வைத்தார். 80 சதவீத உடல் காயத்துடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7:00 மணிக்கு சிறுமி உயிரிழந்தார். சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரிக்கிறார்.