ராமநாதபுரம் , : ராமநாதபுரம் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவில் சட்ட உதவி வக்கீலாக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 23க்குள் விண்ணப்பிக்கலாம். ராமநாதபுரம்மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதி விஜயா கூறியிருப்பதாவது:
குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதிடுவதற்கு முழுநேர அரசு வக்கீல்கள் இருப்பது போல், வக்கீல் வைத்துக்கொள்ளும் வசதி இல்லாத குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதிடுவற்கு முழுநேர வக்கீல்கள் நியமிக்க தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவிற்கு ஒரு தலைமை சட்ட உதவி வக்கீல், 2 துணை சட்ட உதவி வக்கீல்கள், 3 உதவி வக்கீல்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த இடங்கள் நேர்முக தேர்வின் அடிப்படையில் ராமநாதபுரம் சட்டபணிகள் ஆணைக்குழுவால் நிரப்பப்பட உள்ளது. தகுதியானவர்கள்விண்ணப்பிக்கலாம். மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இணையதள முகவரி https://www.tnlegalservices.tn.gov.in அல்லது ராமநாதபுரம்நீதிமன்ற இணைய தளம் E-Courts இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
மார்ச் 23க்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் நேரடியாக அல்லது பதிவு தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.