அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை பகுதிகளில் நடைபெற உள்ள வளர்ச்சி பணிகளுக்கான பூமியின் பூஜையில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பங்கேற்றார்.
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி காமராஜர் நகர் பகுதியில் 12 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டட பணிகள், கோபாலபுரம் பகுதியில் 9 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டும் பணிகள், கட்டங்குடியில் 6 லட்சம் மதிப்பில் நிழற்குடை, மலைபட்டியில் 6 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை, குருந்தமடத்தில் 9 லட்சம் செலவில் கலையரங்கம், ராமநாயக்கன்பட்டியில் 8 லட்சம் செலவில் பல்நோக்கு பயன்பாட்டு கட்டடம், தொடர்ந்து சுக்கிலநத்தம், செம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியவள்ளி குளம் உட்பட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூஜைகளில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
ஒன்றிய குழு தலைவர் சசிகலா, ஊராட்சி தலைவர்கள், பி.டி. ஒ, க்கள் கலந்து கொண்டனர்.