ஸ்ரீவில்லிபுத்தூர், : ''சட்டம் ஒழுங்கை தி.மு.க.,விடம் எதிர்பார்க்க முடியாது,'' என அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்த பின்பு அவர் கூறியதாவது;
தி.மு.க.,வில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கோயில் வாசல் முதல் கோர்ட் வாசல் வரை கொலை, வெட்டு குத்து சம்பவங்கள் தான் நடக்கிறது. சட்டம் ஒழுங்கை தி.மு.க.,விடம் எதிர்பார்க்க முடியாது.
அவர்கள் மக்களுக்காக ஆட்சி நடத்த மாட்டார்கள். பிரச்சனைகளை திசை திருப்ப காட்சி தான் நடத்துவார்கள். விரைவில் தி.மு.க.,வில் உட்கட்சி பிரச்னை வெடிக்கப் போகிறது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவெடுக்க முடியாது பா.ஜ., தலைமை தான் முடிவு எடுக்கும். தேர்தல் வரும் போது தலைவர்கள் கூட்டணி பற்றி முடிவு செய்வார்கள். பன்னீர்செல்வம் யாரை சந்தித்தாலும் எங்களுக்கு கவலை இல்லை, என்றார்.