சிவகாசி, : சிவகாசி ஒன்றியம் எரிச்சநத்தம் இ.புதுப்பட்டியில் சேதமடைந்துள்ள சமுதாயக்கூடத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி ஒன்றியம் எரிச்சநத்தம் இ.புதுப்பட்டியில் 2014 ல் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. மக்கள் குறைந்த வாடகையில், திருமணம், காது குத்து உள்ளிட்ட விசேஷங்களை நடத்தி வந்தனர். சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் சமுதாய கூடம் சேதமடைந்தது. தொடர்ந்து ரூ. 1.75 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கண் துடைப்பாக நடந்த பராமரிப்பு பணியால் சமுதாயக்கூடத்தை பயன்படுத்தவே முடியவில்லை.
இதனால் ஏழைகள் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களை தனியார் மண்டபத்தில் அதிக கட்டணம் கொடுத்து, சிரமப்பட்டு நடத்துகின்றனர். எனவே சேதம் அடைந்த சமுதாய கூடத்தில் முறையாக பராமரிப்பு பணிகள் நடத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.