குல தெய்வ வழிபாடு நன்மை தரும் திருச்சி கல்யாணராமன் பேச்சு

Added : மார் 19, 2023 | |
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர், : ''இறைவன் அனைவருக்கும் ஞானத்தை அளித்துள்ளான். எப்போதும் நாம் இறை நாமத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். குலதெய்வ வழிபாடு வாழ்க்கையில் சிறப்பை தரும்,'' என ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார்.ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு சமயச் சொற்பொழிவு மன்றத்தின் சார்பில் நடந்த ஆன்மிக



ஸ்ரீவில்லிபுத்தூர், : ''இறைவன் அனைவருக்கும் ஞானத்தை அளித்துள்ளான். எப்போதும் நாம் இறை நாமத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். குலதெய்வ வழிபாடு வாழ்க்கையில் சிறப்பை தரும்,'' என ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு சமயச் சொற்பொழிவு மன்றத்தின் சார்பில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது,

இறைவன் நம் அனைவருக்கும் ஞானத்தை அளித்துள்ளான். நம் மனதில் அழுக்கு படிந்துள்ளது. இறைவனின் நாமத்தை சொல்வதன் மூலம் அழுக்கை நீக்க வேண்டும். அப்படிச் செய்தால் வாழ்க்கை பிரகாசிக்கும்.

ஆண்கள் இல்லறத்தில் ஈடுபடுகிறவன், பெண்கள் இல்லறத்தை நடத்துகிறவள். ஆண், பெண் சமமல்ல. பெண் உயர்ந்தவள். எனவே, பெண்கள் சொன்னால் பலிக்கும். பெண்கள் அமங்கல வார்த்தைகளை பேசக்கூடாது.

வீட்டில் பெரியவர்கள் பேச்சைக் கேட்டு ஆண்கள் நடக்க வேண்டும். ஆண்கள் மது, மாது, சூதினை தூக்கி எறிய வேண்டும். அப்போதுதான் வீட்டில் ஐஸ்வர்யம் நிறைந்து செல்வம் தங்கும்.

குழந்தைகளுக்கு இறைவனின் பெயரை சூட்டுங்கள். எப்போதும் இறைவனின் நாமத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் தங்களின் குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் குடும்பத்துடன் சென்று வணங்க வேண்டும்.

நம்மை நல்லவன் என பொல்லாதவன் கூட சொல்லும்படி பெயர் வாங்க வேண்டும். சகிப்புத் தன்மையுடன் வாழ வேண்டும். உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும், புறமும் அகமும், புறமும் தூய்மையாக இருக்க வேண்டும்.

அனைவரும் பகவத் கீதை, திருக்குறள், தேவாரம், திவ்ய பிரபந்தம் படிக்க வேண்டும். அனைவரும் நன்றாக இருக்க வேண்டுமென இறைவன் கவலைப்படுகிறான். பகவான் நாமம் மட்டுமே நம்மை காப்பாற்றும். ஆபத்து காலத்தில் உதவும். எனவே, நன்றாக இருக்கும் போதே இறைவனின் நாமத்தை உச்சரித்தால் முதுமையில் சிரமங்கள் எதுவும் இல்லை.

எந்த காரியம் செய்தாலும் இறைவனின் நாமத்தை உச்சரித்து செய்ய வேண்டும் குழந்தைகளுக்கு பக்தியை ஊட்ட வேண்டும்.

பூமியில் கவலை இல்லாத மனிதன் யாரும் இல்லை. நமக்கு தீர்மானிக்கப்பட்ட உண்மை விதி. அதனை மாற்ற முடியாது, என பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X