தேனி, : வெளி மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் தொழிலாளர் நலத்துறை, தொழிலக பாதுகாப்பு துணை இயக்குனரகம் சார்பில் நேற்று கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடந்தது.
தொழிலக பாதுகாப்பு துணை இயக்குனர் ராஜ்குமார் தலைமை வகித்தார். தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
நிறுவன உரிமையாளர்கள், நிறுவன மனித வள நிர்வாகிகள் பங்கேற்றனர்.
உதவி கமிஷனர், பதிவு செய்யப்படாத வெளி மாநில தொழிலாளர்கள் விபரங்களை உடனடியாக நலத்துறை இணையத்தில் பதிவிடுவது அவசியம்.' என அறிவுறுத்தினார்.மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் 568 பேர், கட்டுமானத் தொழிலாளர்கள்,125 பேர், மேகமலை தோட்டத் தொழிலாளர்களாக 234 பேர், வணிக கடை உணவு விடுதிகளில் 211 பேர் என மொத்தம் 1138 பேர் தொழிலாளர் நலத்துறை இணையத்தில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.