ஆத்துார், ; ஆத்துாரில் வட்டார வள மையம் சார்பில் குறும்படம் தயாரித்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் ஆத்துார் ஒன்றியத்தில் 450 மையங்கள் செயல்படுகிறது. இங்கு பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த குறும்படம் தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டது.
தொடக்கநிலைப் பிரிவில் சித்தையன்கோட்டை தொடக்கப்பள்ளி தன்னார்வலர் சத்யாவின் 'சுற்றுச்சூழல் நெகிழி' என்ற குறும்படம், உயர் தொடக்க நிலை பிரிவில் அம்பாத்துறை ராமநாதபுரம் தொடக்கப்பள்ளி தன்னார்வலர் பிரியங்கா பரிமளாதேவியின் 'சுற்றுச்சூழல் சார்ந்து மரங்களை பாதுகாப்போம்' என்ற குறும்படம் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றது.
ஆத்துார் வட்டார வள மையம் சார்பில் குறும்படம் தயாரித்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இல்லம் தேடி கல்வி திட்ட ஆசிரிய பயிற்றுநர் ஜாஸ்மின் பேகம் தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமாரி முன்னிலை வகித்தார். ஆத்துார் வட்டார பொறுப்பாசிரியர் ராஜமாணிக்கம் ,தலைமை ஆசிரியர்கள் முனியம்மாள், மல்லிகா தன்னார்வலர்களை பாராட்டினர்.