விருதுநகர், : ராஜபாளையம் மாலையாபுரம், அம்பேத்கர் நகர், கணபதி கோயில் உள்ளிட்ட பகுதிகளில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த வேனை சோதனை செய்த போது 50 கிலோ அடங்கிய 25 பைகளில் கொண்டு வந்த ஆயிரத்து 250 கிலோ ரேஷன் அரிசியை கண்டறிந்து தென்காசி மாவட்டம் ஆழ்வார் குறிச்சியை சேர்ந்த சுடலை மணி 36, ஆலங்குளம் வரதன் 21, இருவரையும் கைது செய்து வேன், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
மேலும் அரிசி உரிமையாளர் சங்கரன்கோவில் செந்தூர் பாண்டியை தேடி வருகின்றனர்.