விருதுநகர், :விருதுநகரில் வேல்டு விஷன் திட்டத்தில் மாற்று கல்வி மையத்தின் மூலம் பயின்ற 248 குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
மாவட்டத்தின் 30 கிராமங்களில் 36 இடங்களில் வேல்டு விஷன் இந்தியா திட்டம் மூலம் ஆயிரத்து 250 குழந்தைகள் ஓராண்டாக பயின்று வந்தனர். அதில் 248 பேர் தமிழ் வாசித்தல், எழுதுதல், அடிப்படை கணிதம் உள்ளிட்டவற்றை வளர்த்துக் கொண்டனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் வேல்டு விஷன் இந்தியா விருதுநகர் திட்ட அலுவலர் தாமஸ் தலைமை வகித்தார்.
மாவட்ட குழந்தைகள் அலகு ஜானகி, குழந்தைகள் நல்வாழ்வுக் குழு முனியம்மாள், சமுதாய அமைப்பு தலைவர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் கேப்டன் மால் நன்றி கூறினார். குழந்தைகளுக்கு புத்தகப்பை வழங்கப்பட்டது.