விருதுநகர், : விருதுநகர் வன்னியப் பெருமாள் கல்லூரி்யில் 61ம் ஆண்டு விழா, நிறுவனர் தின விழா கொண்டாடப்பட்டது.
கல்லூரி தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சிவபாலேஸ்வரி முன்னிலை வகித்தார்.
சென்னை சோகோ மென்பொருள் மேம்பாட்டு நிறுவன திட்ட இயக்குனர் ராஜலட்சுமி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். சிவகாசி அரசன் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் அசோகன், நளினி வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது.
மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பொருளாளர் ரவிசங்கர், புரவலர் மகேந்திரன், செயலாளர் கோவிந்த ராஜபெருமாள், இணை செயலாளர் லதா, கல்லூரி முதல்வர் மீனாராணி உட்பட மாணவிகள், பெற்றோர் பங்கேற்றனர்.