தொழிலாளி தற்கொலை
வடமதுரை: செங்குறிச்சி கம்பிளியம்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மாரிமுத்து 39. வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
ஒருவர் பலி
சத்திரப்பட்டி: பழநி அருகே விரலப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் 72. ஊராட்சி வாட்டர் மேன் ஆக பணிபுரிந்த இவர் ,திண்டுக்கல் -பழநி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் வந்த போது, எதிரே வந்த கார் மோதியதில் இறந்தார். சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
திருடியவர் கைது
பழநி: பழநி, இட்டேரிரோட்டில் செயல்படும் இரும்பு கடையில் சத்யா நகரை சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநர் பெரியண்ணா 21, பொருட்களை திருடி உள்ளார். இதை பார்த்த உரிமையாளர் ஹபிப்ரகுமான் பழநி டவுன் போலீசில் ஒப்படைத்தார். அதன்படி போலீசார் கைது செய்தனர்.