சாத்துார், : சாத்தூர் மேட்டமலை பி. எஸ். என். எல். பி. எட்., கல்லூரி, கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி ஆகியோர் இணைந்து இறைவி 99.0 என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி தலைவர் ராஜூ தலைமை வகித்தார். செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்கத் தலைவர் பார்க்கவி நிகழ்ச்சியை துவக்கினார்.
பி.எட்., கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார். கலைக் கல்லூரி முதல்வர் உஷா தேவி வாழ்த்தினார்.
பரிதா பேகம் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். துறைத் தலைவர் பிரவீனா நன்றி கூறினார். மாணவிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் பேராசிரியர் சுதா ஏற்பாடுகளை செய்திருந்தார்.