சிவகாசி, : சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுடன் கலெக்டர் ஜெயசீலன் கலந்துரையாடினார்.
சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள், செயலர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, ஒன்றிய குழு துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமமூர்த்தி, ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர். கலெக்டர் ஜெயசீலன் பங்கேற்று பேசுகையில், கிராம பகுதிகளில் மக்கள் அதிகபடியாக பயன்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த வேண்டும். கிராமங்களில் கலையரங்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பேசினார்.
தொடர்ந்து, ஒவ்வொறு ஊராட்சிகளிலும் அடிப்படை தேவை குறித்து ஊராட்சி தலைவர்களிடம் கேட்டறிந்து கலந்துரையாடினார். பல்வேறு ஊராட்சி தலைவர்கள் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். சித்துராஜபுரம், ஆனையூர், விஸ்வநத்தம், நாரணாபுரம், உட்பட 54 ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement