ஸ்ரீவில்லிபுத்தூர், : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச மகளிர் தினவிழா, பல்கலை மகளிர் மேம்பாட்டு குழு சார்பில் நடந்தது.
துணைத்தலைவர் சசி ஆனந்த் தலைமை வகித்தார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், ஆலோசகர் ஞானசேகர் முன்னிலை வகித்தனர். பேராசிரியை கல்பனா வரவேற்றார். மேடைப் பேச்சாளர் பாரதி பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்ற பெண்களுக்கும், தேசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவி கார்த்திகை செல்விக்கும் மகளிர் தின சிறப்பு விருது வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சங்கீதா, கார்த்திகா தேவி, ராணி, தனலட்சுமி செய்திருந்தனர்.