கம்பம், : கம்பம் பகுதியில் குறைந்த அழுத்த மின் சப்ளையால் பொதுமக்கள், விவசாயிகள் அவதிப்பட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து மின்வாரியம் துரித நடவடிக்கை எடுத்து சரி செய்துள்ளதாக கோட்ட பொறியாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கம்பம் பகுதியில் 10 நாட்களுக்கும் மேலாக குறைந்த மின் அழுத்த சப்ளை இருந்தது. இதனால் வீடுகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், குடிநீர் பம்பிங் ஸ்டேஷன்கள், விவசாய பம்ப் செட்டுகள், செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியாக சின்னமனூர் கோட்ட பொறியாளர் ரமேஷ் தலைமையிலான மின்வாரிய அதிகாரிகள் குழுவினர் நடவடிக்கை எடுத்து, குறைந்த மின் அழுத்த சப்ளையை சீராக்கினர். கோட்ட பொறியாளர் கூறுகையில், குறைந்த மின் அழுந்த சப்ளை சரி செய்யப்பட்டது. விவசாய இணைப்புகளில் டிரான்ஸ்பார்மர் ஒன்று பழுதாகி உள்ளது. அந்த டிரான்ஸ்பார்மரை சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.