மூணாறு, : மூணாறு அருகே கே.டி.எச்.பி.கம்பெனிக்குச் சொந்தமான பெரியவாரை எஸ்டேட் ஆனமுடி டிவிஷனைச் சேர்ந்தவர் தேயிலை தோட்டத் தொழிலாளி மாரிச்சாமி. இவரது ஆறு மாத கர்ப்பிணி பசு பிப்.,16ல் மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை. அதனை தேடியபோது அங்குள்ள தேயிலைத் தோட்டம் 21ல் பசுவின் பின்பகுதியில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்டது. அதனை புலி தாக்கியதாக தெரியவந்ததால் வனத்துறையினரின் அறிவுறுத்தலின்படி சம்பவ இடத்திலேயே பசுவை விட்டுச் சென்றனர். நேற்று முன்தினம் இரவு மீண்டும் வந்த புலி பசுவை கொன்று பின் பகுதியை தின்றது.