சென்னை-பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பிரதமர் 'மித்ரா பூங்கா' வுக்காக, விருதுநகர் மாவட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளதற்காக, பிரதமருக்கு நன்றி.
தென் தமிழகத்தில் ஜவுளித் துறை வளர்ச்சிக்கு, இது பெரும் ஊக்கமாக அமையும். தமிழக அரசின் 'சிப்காட்' இடம், 1,052 ஏக்கர் உள்ளது. அங்கு இந்த திட்டத்தை துவக்கி, எங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement