வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை: தமிழக கவர்னர் ரவிக்கும், தி.மு.க.,விற்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகள் கவர்னருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
![]()
|
தமிழக அரசு எப்படி செயல்படுகிறது, அது அனுப்பிய சில மசோதாக்களுக்கு ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என அனைத்து விஷயங்களையும் மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் கடிதம் வாயிலாக தெரிவித்து வருகிறார் கவர்னர் ரவி.
சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசும் போது, 'கவர்னரின் செயல்பாடுகளைப் பார்த்தால், அவருக்கு வாய் மட்டும் தான் உண்டு; காதுகள் கிடையாது' என்றார். அவருடைய இந்தப் பேச்சு, தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'முரசொலி'யில் வெளியானது.
![]()
|
கவர்னர் ரவி உடனே இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பினாராம். தி.மு.க., தலைவர்கள் தன்னைப் பற்றி அவதுாறாக பேசி வருகின்றனர் என்றும் அவர் கடிதம் எழுதினாராம்.
'கவர்னருக்கு எதிராக கட்டுரைகள் வந்தால் இதை கவர்னர் பொறுத்துக் கொள்வதில்லை; அவருக்கு சகிப்புத்தன்மை இல்லை; இந்த லோக்கல் விஷயங்களை அவரே சமாளித்தாக வேண்டும்' என, சில சீனியர் பா.ஜ., தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
Advertisement