ஒட்டன்சத்திரம், ; ''ஒட்டன்சத்திரம் தொகுதியில் 7000 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாக,'' உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
கள்ளிமந்தையம், பொருளூர், வாகரை, தொப்பம்பட்டி, பாலப்பன்பட்டி, அப்பியம்பட்டி, கரியாம்பட்டி ஊராட்சிகளில் ரூ .37 கோடி பணிகளுக்கு அடிக்கல் , காளியப்பகவுண்டன் பட்டியில் சமுதாய கூடத்தினை திறந்தும், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு ,23 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்,திருமண நிதி உதவி வழங்கிய அவர் பேசியதாவது:
ஒட்டன்சத்திரம் தொகுதியில் 7000 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கு உயர்கல்வி பயில மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது, என்றார்.
எம்.பி., வேலுச்சாமி, ஆர்.டி.ஓ., சிவக்குமார், ஒன்றிய தலைவர்கள் அய்யம்மாள், சத்திய புவனா, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பொன்ராஜ், ஒன்றிய துணைத் தலைவர் தங்கம், தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர் தங்கராஜ் கலந்து கொண்டனர்.