திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பவான்ஸ் கோப்பைக்கான கொடைக்கானல் டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் யங்ஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் என்.பி.ஆர்.மைதானத்தில் நடந்த அரையிறுதி முதல் போட்டியில் ஆடிய கொடைக்கானல் பெஸ்ட் லெவன் அணி 25 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. பெலிக்ஸ் ராஜ்குமார் 33, சதாம்உசேன் 36 ரன்கள், விமல் 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த கொடைக்கானல் கிரவுண்ட் பிரண்ட்ஸ் அணி 23.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து வென்றது. விமல் 69, ராஜசேகர் 37 ரன்கள் எடுத்தனர்.
அரையிறுதி 2ம் போட்டியில் ஆடிய கொடைக்கானல் ராயல் அணி 25 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. சேவியர் ஜெகன் தொடர்ந்து 3 விக்கெட்டுகளையெடுத்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார். சேசிங் செய்த கொடைக்கானல் யங்ஸ்டர்ஸ் அணி 15.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து வென்றது. வினோத்குமார் 53 , அருண்குமார் 52 ரன்கள் எடுத்தனர்.
இறுதி போட்டியில் ஆடிய கொடைக்கானல் கிரவுண்ட் பிரண்ட்ஸ் அணி 29.4 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. விமல் 65 ரன்கள், ரமேஷ் 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த கொடைக்கானல் யங்ஸ்டர்ஸ் அணி 28 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வென்றது. வினோத்குமார் 67, ரமேஷ் 36 ரன்கள் எடுத்தனர்.