வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்-''பாகிஸ்தான் உடனான வர்த்தக உறவை, இந்தியா ஒருபோதும் நிறுத்தவில்லை,'' என, பாகிஸ்தானுக்கான நம் நாட்டின் துணை உயர் கமிஷனர் சுரேஷ் குமார் தெரிவித்து உள்ளார்.
![]()
|
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:
பாகிஸ்தானுடன், இந்தியா எப்போதும் சிறந்த உறவையே விரும்புகிறது.
எங்களுடனான வர்த்தகத்தை பாகிஸ்தான் நிறுத்திய போதும் கூட, நாங்கள் வர்த்தகத்தை நிறுத்தவில்லை. இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகள் மற்றும் சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்.
![]()
|
ஒவ்வொரு ஆண்டும், பாகிஸ்தானைச் சேர்ந்த, 30 ஆயிரம் பேருக்கு 'விசா' வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவ மற்றும் விளையாட்டு விசாக்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறப் போகிறது. இது, சேவைத் துறையில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. தற்போது ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement