தேவிபட்டினம், : தேவிபட்டினம் அருகே ஆற்றங்கரை உஜ்ஜயினி காளியம்மன் கோயிலில் மஹா சண்டி ஹோமம் மற்றும் யாக சாலை வேள்வி பூஜைகள் நடந்தது. முன்னதாக உலக நன்மை வேண்டி அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, சங்கல்பம், லட்சுமி பூஜை, கணபதி வழிபாடு உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து மஹா சண்டி ஹோமத்தில் 1008 மூலிகை பொருட்கள் மற்றும் திரவியங்களும் போடப்பட்டு பூஜைகள் நடந்தன. மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement