மதுரை, : மதுரை தமுக்கம் மைதானத்தில் மதுரை கிரெடாய் சார்பில் நடக்கும் 'பேர் ப்ரோ' வீட்டுக்கடன் கண்காட்சியில் வீட்டை தேர்வு செய்யும் முன்பாகவே வங்கிக்கடன் அனுமதியும் வீட்டை பார்ப்பதற்கு வாகன வசதியும் செய்யப்படுகிறது.
கண்காட்சி குறித்து மதுரை கிரெடாய் தலைவர் ராமகிருஷ்ணா கூறியதாவது:
கிரெடாய் அமைப்பில் உள்ள 20 பில்டர்கள் கண்காட்சியில் ஸ்டால்கள் அமைத்துள்ளோம். வீடு, காலியிடம் வாங்குவதற்கான இடத்தை பார்வையிட விரும்பினால் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, எச்.டி.எப்.சி., கனரா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, பாங்க் ஆப் பரோடா, எல்.ஐ.சி., ஹவுசிங் நிறுவனம் மூலம் வீட்டை தேர்வு செய்யும் முன்பாகவே கடன் அனுமதி பெறலாம். ரூ.20 லட்சம் முதல் ரூ.3 கோடி மதிப்பிலான தனி வீடுகளை கண்காட்சியில் தேர்வு செய்யலாம் என்றார்.
கிரெடாய் செயலாளர் முத்துவிஜயன் கூறியதாவது: 20 பில்டர்களின் ஸ்டால்களிலும் வந்து பார்வையிட்டு விருப்பப்பட்ட இடத்தில் வீடு தேர்வு செய்யலாம்.
ஸ்டாலில் வீடு தேர்வு செய்பவர்களுக்கு வார்டுரோப், செமி மாடுலர் கிச்சன், டிவி யூனிட், பத்திரப்பதிவு இலவசம் போன்ற பல்வேறு சலுகைகளை பில்டர்கள் வழங்குகின்றனர்.
இன்று கண்காட்சிக்கு வந்து பதிவு செய்தாலும் அடுத்த 10 நாட்களுக்கு அந்த சலுகை தொடரும்.
ஒவ்வொரு இடமாக சென்று பில்டர்களின் வீடுகளை தேர்வு செய்வதை விட இங்கு ஒரே இடத்தில் மதுரையின் அனைத்து இடங்களில் கட்டப்பட்டுள்ள தனிவீடு, அபார்ட்மென்ட் வீடுகளை தெரிந்து கொள்ளலாம். வங்கியில் வீட்டுக்கடன் கேட்டு தனியாக அலைய வேண்டியதில்லை. இங்குள்ள பில்டர்களின் காலி வீட்டடி மனைகளை வாங்குவதற்கும் சந்தை மதிப்பின் அளவில் வங்கிக்கடன் வசதி செய்து தருகிறோம். இன்று மாலை விஜய் 'டிவி' தொகுப்பாளர்கள் மா.கா.ப.ஆனந்த், ஸ்ருதிகா வருகின்றனர். கண்காட்சிக்கு வருபவர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கி கவுரவிக்கின்றனர், என்றார்.
இன்று (மார்ச் 19) காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கும் இந்த கிரெடாய் 'பேர் ப்ரோ' கண்காட்சியில் அனுமதி இலவசம்.