வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருச்சி: திருச்சி மாவட்டம் திருவாசி அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை (மார்ச்: 19) லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
![]()
|
சேலம் மாவட்டம் எடப்பாடியிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற காரும், திருச்சியிலிருந்து கரூருக்கு மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரியும் திருவாசி அருகே திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதியது.
இதில் காரில் பயணம் செய்த 9 பேரில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து காரணமாக திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் 3 கி.மீ நீளத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
![]()
|
மாவட்ட எஸ்.பி., சுஜித் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். விபத்தில் இறந்தவர்கள் உடல்கள் உடல் கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்விபத்து குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்