மதுரை, : மதுரை பெத்தானியாபுரத்தில் வசிப்பவர் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன். நேற்றுமுன்தினம் இரவு இவரது வீட்டிற்கு 6 டூவீலர்களில் வந்த 10 பேர் ஆயுதங்களை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஒரு அமைப்பின் நிர்வாகி தெரிவித்த கருத்துக்கு எதிராக பசும்பொன் பாண்டியன் பேசி வீடியோ வெளியிட்டார். இதன்காரணமாக அவருக்கு மிரட்டல் விடுத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.