மதுரை, : ''தமிழக கோயில்களில் வழிபாட்டு முறையிலும், சடங்குகளிலும் ஹிந்து அறநிலையத்துறை தலையிடக்கூடாது'' என ஹிந்துஸ்தான் தேசிய கட்சி செயல் தலைவர் சீனிவாசன் ராஜாஜி தெரிவித்தார்.
மதுரையில் நேற்று இக்கட்சியின் மாநில செயல்வீரர்கள் கூட்டம் நிறுவனர் கிருஷ்ணசாமி தலைமையில் நடந்தது.
கேரளா தட்சிணாமூர்த்தி சுவாமிகள், ரமேஷ் சுவாமிகள், மாநில தலைவர் பத்மநாபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள் குறித்து சீனிவாசன் ராஜாஜி கூறியதாவது:
கோயில் வழிபாட்டு முறையிலும், சடங்குகளிலும் அறநிலைத்துறை தலையிடக்கூடாது. கோயில்களை இடிப்பதும், கோயில் நெறிமுறைகளை மாற்றுவதுமாக நடந்து கொள்வதை அறநிலைத்துறை கைவிட வேண்டும். கோயில்களை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
கோயில்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து மடாதிபதிகள், ஆன்மிக தலைவர்கள் இணைந்து முடிவெடுக்க வேண்டும், என்றார்.