வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை,-தமிழகத்தில் கூடுதலாக, 4,000 மெகா வாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை கையாளும் வகையில், 'கிரீன் எனர்ஜி காரிடார் - 2' எனப்படும் பசுமை மின் வழித்தடம் இரண்டாம் கட்டத்தை, 2025 - 26க்குள் முடிக்க, மத்திய மின் துறை உத்தரவிட்டு உள்ளது.
![]()
|
இதற்கான நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்தும், மின் வாரியம் பணிகளை துவக்கா மல் உள்ளது.
நிதி உதவி
தமிழகம், குஜராத், ஹிமாச்சல், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், உ.பி., ஆகிய ஏழு மாநிலங்களில், 20 ஆயிரம் மெகா வாட் திறனில் காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வினியோகிக்கும் பசுமை மின் வழித்தடத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்த, மத்திய அமைச்சரவை 2022 ஜனவரியில் ஒப்புதல் அளித்தது.
இதற்காக, ஏழு மாநிலங் களிலும் மின் வழித்தடங்களும், 'டிரான்ஸ்பார்மர்'களும் நிறுவப்பட உள்ளன. பசுமை மின் வழித்தடம் அமைக்கும் பணிகளை, மாநில மின் தொடரமைப்பு கழகங்களே மேற்கொள்ள வேண்டும்.
இதில் தமிழகத்தில் கூடுதலாக 4,000 மெகா வாட் காற்றாலை, சூரிய சக்தி மின்சாரத்தை கையாளும் வகையில், டிரான்ஸ்பார்மர்கள், மின் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
திருநெல்வேலி மாவட் டத்தில் உள்ள சமூகரெங்கபுரத்தில் 400 கிலோ வோல்ட் திறனில் துணை மின் நிலையம்; கன்னியாகுமரி, முப்பந்தல்; திருப்பூர், பூலாவடியில் 230 கி.வோ., துணை மின் நிலையமும் அமைக்கப்பட உள்ளன.
மேற்கண்ட திட்ட பணிகளை 719.76 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள, மத்திய புதுப்பிக்கத்தக்க மின் துறை ஒப்புதல் அளித்தது. அதில், மத்திய அரசு 237.52 கோடி ரூபாய் நிதி உதவி செய்யும்.
ஜெர்மன் நாட்டின் கே.எப்.டபிள்யூ., வங்கி, 338 கோடி ரூபாய் கடனாக வழங்கும். மீதி, மின் வாரியத்தின் சொந்த நிதி. கடந்த 2022 டிசம்பரில் மின் வாரியம், கே.எப்.டபிள்யூ., வங்கி இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
தற்போது, தமிழகத்தில் பல நிறுவனங்களும், சூரியசக்தி மின் நிலையங்களை அமைத்து வருகின்றன.
![]()
|
நடவடிக்கை
மத்திய மின் துறை, பசுமை மின் வழித்தட இரண்டாம் கட்ட பணிகளை, 2025 - 26க்குள் முடிக்க காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இன்னும் மின் வாரியம், அந்த வழித்தட பணிகளை துவக்காமல் உள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இரண்டாம் கட்ட பசுமை மின் வழித்தடத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு பணிக்கும் மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
'இந்த பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த இரு மாதங்களில் பணிகளை துவக்க நடவ டிக்கை எடுக்கப்படும்' என்றார்.
Advertisement