செல்போன் முதல் கேஜட்களின் வரவு, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதில் தவிர்க்க முடியாதது இயர்போன். இப்போது எங்குப் பார்த்தாலும் இயர்போனை மாட்டிக் கொண்டே செல்வது வழக்கமாகி விட்டது.
காலையில் இயர்போனுடன் தொடங்கும் நாள், இரவு வரை அது தொடர்கிறது. இதனால் நன்மைகளை விடத் தீமைகள் தான் அதிகம். குறிப்பாகச் சாலையில் செல்லும் போதும், வாகனங்கள் இயக்கும் போதும், இயர்போனை மாட்டிச் செல்வதால் விபத்துகள் அதிகம் நடைபெறுகிறது. இதுமட்டுமல்லாமல் இயர்போனை தொடர்ந்து பயன்படுத்தினால் காது திறன் பாதிக்கப்படும். காது மட்டுமல்லாமல் உள் உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
![]()
|
நாம் காதுகளில் இயர்போனை பயன்படுத்தும் போது காற்றோட்டம் முழுவதும் நிறுத்தப்படும். இதனால் ஈரப்பாதம் காதின் உள்ளே தங்குவதால், நாம் பயன்படுத்தும் நேர அளவிற்கு ஏற்ப பாக்டீரியா தொற்று அதிகரித்துக் கொண்டே போகும்.
![]()
|
நாம் பயன்படுத்தும் இயர்போன் 100-110 டிபி சவுண்ட் வரை கொடுக்கும். ஆனால் நமது காதுகளுக்கு 85டிபி சவுண்ட் அளவு மட்டுமே பாதுகாப்பானது. இதனால் வால்யூமை 60 சதவீதத்திற்கு மேல் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
![]()
|
இன்றைய சூழலில் நம்மில் பெரும்பாலானோர் செய்யும் தவறுகளில் ஒன்று, இயர்போனை மாற்றிப் பயன்படுத்துவது. இப்படி நமது நண்பர்களிடமிருந்து இயர்போனை வாங்கி பயன்படுத்தும் போது, அதைச் சுத்தம் செய்து தான் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
![]()
|