சென்னை : காவல் துறையினரின் வாரிசுகளுக்கு, -தமிழகம் முழுதும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருவதாக, டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
டி.ஜி.பி., அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறையில் பணிபுரிவோரின் வாரிசுகளுக்கு, தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த, டி.ஜி.பி., அறிவுறுத்தி உள்ளார்.
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனரகம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகமை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியோரின் உதவியுடன், வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
வேலுாரில் நாளையும், அதன் மறுநாளும்; திருச்சி மற்றும் மதுரையில், 25, 26 தேதிகளிலும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. சென்னை, கோவை, ஓசூரில், வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.