ஆற்காடு : ஆற்காடு அருகே, வெறிநாய்கள் கடித்து, 10 பேர் படுகாயமடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே மாசாபேட்டை பகுதியில், ஏராளமான வெறிநாய்கள் சுற்றிக்கொண்டிருந்தன. நேற்று காலை மாசாபேட்டை அண்ணா நகர் வழியாக சென்ற பவன்குமார், 24, திவ்யா, 35, அம்பிகா, 25, உள்ளிட்ட, 10 பேரை வெறிநாய்கள் விரட்டிச்சென்று கடித்துக் குதறின.
படுகாயமடைந்த அவர்கள், ஆற்காடு, வாலாஜாபேட்டையிலுள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து, ஆற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மக்களை அச்சுறுத்தி வரும் வெறிநாய்களை பிடிக்க, ஆற்காடு நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.