தஞ்சாவூர் : கும்பகோணத்தில், 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவரை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், மேலக்காவிரியைச் சேர்ந்தவர்கள் செல்வம், 65, முருகன், 55. இருவரும், 8 வயது சிறுமி ஒருவருக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி, தொடர்ந்து பாலியல் தொல்லைகள் கொடுத்துள்ளனர்.
நேற்று முன்தினம், இருவரும், சிறுமியை அழைத்து மீண்டும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதைப் பார்த்த சிறுமியின் தந்தையும், உறவினர்களும் சேர்ந்து, அவர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கும்பகோணம் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் அவர்கள் இருவரையும் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.