சென்னை : தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 15 ஆயிரம் மெகா வாட்டாக உள்ளது. இம்மாத துவக்கத்தில் இருந்து, வெயில் சுட்டெரிப்பதால் வீடுகளில், 'ஏசி' சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
தொழிற்சாலை உட்பட அனைத்து பிரிவுகளிலும் மின் பயன்பாடு அதிகம் உள்ளது. இதனால் தொடர்ந்து அதிகரித்து வந்த மின் தேவை, 16ம் தேதி காலை 11:00 மணிக்குஎப்போதும் இல்லாத வகையில் மின் தேவை, 18 ஆயிரத்து 53 மெகா வாட்டாக புதிய உச்சத்தை எட்டியது.
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் காலை திடீரென மழை பெய்தது.
இதனால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால், 'ஏசி' சாதன பயன்பாடு குறைந்துள்ளது. நேற்று முன்தினமும், நேற்றும் மின் தேவை, 1,000 மெகா வாட் முதல் 1,500 மெகா வாட் வரை குறைந்துள்ளது.