சேலம் : வேறு ஒருவருடன் பழகிய ஆத்திரத்தில் பெண்ணை கொலை செய்த ஆட்டோ டிரைவர், போலீசில் சரணடைந்தார்.
சேலம், தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில், 4வது தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாதேஸ்வரன், 48. திருமணமான இவர், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.சேலம், கோட்டை, அண்ணா நகரை சேர்ந்த பாரூக் மனைவி செகனாஷ், 48. இவரது கணவர் பெங்களூரு சென்றதால் தனிமையில் இருந்தார்.
இந்நிலையில் மாதேஸ்வரன், செகனாஷ் இடையே பழக்கம் ஏற்பட்டு, 15 ஆண்டாக சேர்ந்து வாழ்ந்தனர். அதேநேரம் தாதகாப்பட்டியை சேர்ந்த வேறொருவருடன் செகனாஷூக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாதேஸ்வரன் தட்டிக்கேட்க, அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது.
இதுதொடர்பாக நேற்றும் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த மாதேஸ்வரன், துண்டால் கழுத்தை இறுக்கி செகனா ைஷ கொலை செய்துவிட்டார்.
பின் அன்னதானப்பட்டி போலீசில் சரணடைந்தார். போலீசார், பெண் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.