கோவை : கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான குழுவினர், மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில், 15ம் தேதி சோதனை நடத்தினர். வருவாய் பிரிவில், பில் கலெக்டர் ராஜேஸ்வரியிடம் ரூ.60 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றினர்.
லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் லதா கூறுகையில், ''மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில், கணக்கில் வராத பணம் கைப்பற்றியது தொடர்பாக, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, மாநகராட்சிக்கு பரிந்துரைத்துள்ளோம்,'' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement