கோவை : சுசி லேண்ட் புரமோட்டர்ஸ் நிறுவனம், வருமான வரி அதிகாரி மனைவிக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தது தொடர்பாக விசாரிக்க கோவை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், 'சுசி லேன்ட் புரமோட்டர்ஸ்' என்ற நிதி நிறுவனம், 2012 வரை செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், 51 பேரிடம், 87.33 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், அதன் பங்குதாரர்கள் குருசாமி,42, அமுதன், 31, பார்த்திபன்,35, சுரேஷ்,36, ஆகியோருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கோவை டான்பிட் கோர்ட்டில் நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிறுவன பங்குதாரர் குருசாமி, டெபாசிட்தாரர்களிடம் இருந்து பெற்ற பணத்தில், நிலம் வாங்க கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக வழக்கு விசாரணையின் போது தெரிவித்தார். கோவை வருமான வரி அதிகாரி மனைவி பெயரில், ஒரு கோடி ரூபாய், பிரபல தொலைக்காட்சி நிருபர் ஒருவருக்கு, 5 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., விசாரணை நடத்தி அறிக்கை அறிக்க, நீதிபதி அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.