புன்செய் புளியம்பட்டி : ''நுண்ணீர் பாசன திட்டம் அமைப்பது குறித்து, முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்,'' என, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை மேல்பகுதியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 25 லட்சம் ரூபாய் செலவில் தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சரும், கோபி எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையன், பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி ஆகியோர் பணியை தொடங்கி வைத்தனர்.
செங்கோட்டையன் கூறியதாவது:
பவானிசாகர் அணையில் இருந்து, செயல்படுத்தப்படும் கீழ்பவானி வாய்க்கால் பாசன திட்டம் மூலம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதில், சோதனை அடிப்படையில் சத்தியமங்கலம் பகுதியில், 2,400 ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், ஆண்டு முழுவதும் கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு, பாசனத்திற்கு தண்ணீர் வழங்க இயலுமா என, அரசு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்