சென்னை: அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ் என மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஓபிஎஸ் கட்சிக்கு விரோத செயல்களை செய்து வருகிறார். கட்சி நலனுக்காக ஓபிஎஸ் எதாவது செய்துள்ளாரா? அவர் நிதானத்தை இழந்து பேசி வருகிறார்.
பிக் பாக்கெட் என்றால் அது ஓபிஎஸ்தான். தன்னுடைய சுயநலத்திற்காக மட்டுமே அவர் செயல்பட்டு வருகிறார். அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ். தொடர்ந்து அவர் முரணான கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதிமுக நலனுக்காக ஓபிஎஸ் பேசியது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.