சேலம்: வரத்து அதிகரிப்பால் பெரிய வெங்காயம் விலை சரிந்துள்ளது.
கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களில் பெரிய வெங்காய சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. அங்கு நன்றாக மழை பெய்ததால் விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்தனர். இதையொட்டி அறுவடை சீசன் தொடங்கியது முதல், சேலம் லீபஜார், பால் மார்க்கெட், கடைவீதி, ஆற்றோர காய்கறி உள்ளிட்ட மார்க்கெட் பகுதிகளுக்கு வரத்து அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மொத்த வியாபாரிகள் கூறியதாவது:
சேலம் மார்க்கெட்டுக்கு ஜனவரியில் தினமும், 100 டன் பெரிய வெங்காயம் வந்து கொண்டிருந்தது. சீசனால் தற்போது வரத்து அதிகரித்து, 250 டன்னாக அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ, 20 முதல், 35 ரூபாய் வரை, பெரிய வெங்காயம் கடைகளில் விற்கப்படுகிறது. அதேபோல் முதல் ரகம், 3 கிலோ, 100 ரூபாய், இரண்டாம் ரகம், 4 கிலோ, 100; மூன்றாம் ரகம், 5 கிலோ, 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதேபோல் சின்ன வெங்காயம் சேலம் சுற்றுவட்டார பகுதி, நாமக்கல் ராசிபுரம், வெண்ணந்துார், பொம்மிடி உள்ளிட்ட இடங்களில் இருந்து வரத்து உள்ளது. கடந்த மாதம், 200 டன் வரை வந்து கொண்டிருந்தது. சீசன் முடிந்ததால் தற்போது, 50 முதல் 60 டன் வருகிறது. வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு, 10 முதல், 20 ரூபாய் வரை உயர்ந்து, 40 முதல், 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement