பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் மூலம், 7,000க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் பராமரிக்கப்படுகின்றன.
மின் இணைப்புடன், வீட்டு உரிமையாளர், வாடகைக்கு குடியிருப்போர், ஆதார் எண்களை இணைத்தனர். தற்போது பனமரத்துப்பட்டியில், வாடகைக்கு குடியிருப்போரின் வீடுகளுக்கு வரும் மின் ஊழியர்கள் சென்று, வீட்டு உரிமையாளர்களின், 'ஆதார்' எண்ணை கேட்கின்றனர். இதுதொடர்பாக மக்கள், மின் ஊழியர் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், 'சாப்ட்வேரில் இருந்து குடியிருப்போரின் ஆதார் ரிஜக்ட் ஆகி விட்டது. அதனால் உரிமையாளர்களின் ஆதார் கேட்கிறோம். ஆனால் எத்தனை தடவை கேட்பீங்க என, மக்கள் சண்டைக்கு வருகின்றனர்' என்றனர்.
பனமரத்துப்பட்டி வீட்டு உரிமையாளர்கள் கூறுகையில், 'வாடகை வீட்டில் குடியிருப்போர் மின் கட்டணம் செலுத்துகின்றனர். அவர்களுக்குதான் அரசு வழங்கும் மின் மானிய சலுகை கிடைக்கிறது. அதனால் குடியிருப்போரின் ஆதாரை இணைக்கலாம். தற்போது உரிமையாளரின் ஆதார் கேட்கின்றனர்' என்றனர்.