சேலம்: சீலநாயக்கன்பட்டி, பெருமாள் கோவில் மேட்டை சேர்ந்தவர் மணிகண்டன், 27. நேற்று காலை, 7:00 மணிக்கு சேலம், அல்லிக்குட்டை காலனி, கருவாட்டு மண்டி அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, தாதம்பட்டி, வேலு நகர், 2வது தெருவை சேர்ந்த ரமேஷ்குமார், 28, கத்தியை காட்டி மிரட்டி மணிகண்டனை வழிமறித்து அவரது பாக்கெட்டில் இருந்த, 4,550 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பினார்.
அதேபோல் குகை, ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் சரவணன், 42. நேற்று காலை, 9:00 மணிக்கு அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார். அவரை வழிமறித்த, நெத்திமேடு, முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த சிவக்குமார், 42, கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டார். அத்துடன் ரவுடி என அலப்பறையில் ஈடுபட்டார். இரு புகார் தொடர்பாக, அன்னதானப்பட்டி போலீசார் ரமேஷ்குமார், சிவக்குமாரை தேடுகின்றனர்.