சேலம்: பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக, கண்களை கட்டிக்கொண்டு, சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சேலம் துரோணா மூன்றாம் கண் யோகா அமைப்பினர், சேலம் மாநகர போலீசார் இணைந்து, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, விழிப்புணர்வுக்கு கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சியை நேற்று நடத்தினர். அதில் சரண்தேவ், 12, எபியா, 16, சாய் தன்யஸ்ரீ, 8, ரக்ஷிதா, 8, ஆகிய மாணவ, மாணவியர் கண்களை கட்டிக்கொண்டு ஏற்காடு அடிவாரத்தில் சைக்கிள் பயணத்தை தொடங்கினர். அஸ்தம்பட்டி, சாரதா கல்லுாரி சாலை, 5 ரோடு, 4 ரோடு வழியே, காந்தி மைதானத்தில் நிறைவடைந்தது.
அங்கு மாணவி வர்ஷினி, 7, கண்களை கட்டிக்கொண்டு, தன் முன் கட்டி தொங்கவிடப்பட்ட, 20 கலர் பானைகளில் மற்றவர்கள் கூறும் கலரை தேர்வு செய்து, சிலம்பத்தில் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, டாக்டர் சுரேஷ்குமார், யூத் கேம்ஸ் அசோசியேஷன் தலைவர் செவ்வை அன்புக்
கரசு, மூன்றாம் கண் யோகா பயிற்சியாளர் அருள்முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.